மீன்பிடிக்க சென்றவர் திடீரென உயிரிழப்பு - வவுனியாவில் சம்பவம்...!
வவுனியாவில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா இராசேந்திரகுளம் குளப்பகுதியில் மீன்பிடிக்க சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது மனைவி குளத்து பகுதிக்கு சென்று தேடியுள்ளார். இதன்போது குளப்பகுதியில் காணப்பட்ட பிட்டியில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
மின்னல் தாக்கத்தின் காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்த நபர் சிவலிங்கம் தினேஷ்குமார் வயது - 28 என்ற இளம் குடும்பஸ்தரே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் நெளுக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை