தீக்காயங்களுக்கு உள்ளான மனைவி சாவு - கணவன் பொலிஸாரால் கைது...!
தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப்பெண் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பருத்தித்துறை பொலிசார் குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 13ம் திகதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் அவரது மனைவி மண்ணெண்ணெயை எடுத்து தனது தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.
இதன்போது கணவன் தன்னிடமிருந்த தீப்பெட்டி மூலம் மனைவிக்கு தீ வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை