விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை...!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியில், விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
உறவினர்கள் இன்று காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவேளை குறித்த குடும்பஸ்தர் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் குறித்த தற்கொலைக்கான காரணம் என்ன என இதுவரை தெரியவரவில்லை
காரைநகர் - களபூமியைச் சேர்ந்த சிவஞானம் ரவிச்சந்திரன் (வயது 50) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை