ஆடு திருடர்களால் நடுவீதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி...!
தமிழகத்தின் திருச்சி அருகே, ஆடு திருடும் கும்பல் ஒன்றால் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் நேற்றிரவு ரோந்துப் பணியில் இருந்தபோது, இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை இவர் தடுத்து நிறுத்திய போது அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தனர்.
எனினும் அவர்களை அவர் துரத்திச்சென்று மடக்கிய போது குறித்த கும்பல் அவரது தலையில் வெட்டிவிட்டு தப்பியிருந்தனர். காயமடைத்த அதிகாரி அந்த இடத்திலேயே (நடுவீதியில்) உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை