யாழ்ப்பாணம் இணுவில் கந்தசாமி ஆலயத்தில் சூரன் போர் வழிபாடு...
இந்துக்கள் கடைப்பிடிக்கின்ற விரதங்களிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரதமாகாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது.
ஆறு நாட்கள் தொடர்சியாக முருகப் பெருமானுக்கு பக்த அடியவர்களினால் விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் சூரன் போர் வழிபாடு இடம்பெற்றது.
பெருமளவான பக்த அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
கருத்துகள் இல்லை