விராட் ஹோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் வசமாக சிக்கினார்...
இந்திய அணியின் கேப்டானான விராட் கோலி டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலி மகளுக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதனால், கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்த டெல்லி மகளிர் ஆணையம் கோலியின் மகள் மீதான அச்சுறுத்தல்கள் குறித்து நாம் வெட்கப்பட வேண்டும், இந்த அச்சுறுத்தல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதன்பின்னர், இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பொலிசார் விசாரணை செய்ததில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் தான் விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், விராட் கோலியின் குழந்தைக்கு பலாத்கார மிரட்டல் விடுத்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ராம் நாகேஷ் சீனிவாஸ் அகுபதினி என்பவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
23 வயதான ராம் நாகேஷ் சீனிவாஸ் பொறியியல் பட்டதாரி ஆவார். மேலும் இவர் ஹைதராபாத்தை சேர்ந்த வலது சாரி ஆதரவாளர் என தெரியவந்தது.
தற்போது அவரை மும்பை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை