• Breaking News

    சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்...!

     சிறுவர்கள் வீட்டிலேயே அடைக்கப்படுவதால் அவர்கள் மத்தியில் மனநோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருவதாக மருத்துவர் விஜேசூரிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

    இதன் விளைவாக, பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களுக்கு வசதியான வீட்டுச் சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே சிறுவர்களை பல்வேறு மன நிலைகளில் இருந்து விடுவிக்க பாடசாலைக்கு அனுப்புவது அவசியம். குழந்தைகள் தொலைபேசி, இணையத்தளம் போன்றவற்றில் மூழ்கி விளையாட்டுகளுக்கு அடிமையாகி மனதளவில் நலிவடைவதாகவும், இந்நிலையில் அவர்கள் பல்வேறு தவறான செயல்களுக்கு ஆளாக நேரிடுவதாகவும் அவர் கூறுகிறார்.

    "சமீபத்தில், சிறுவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மன நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார்கள். பாடசாலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலையே இதற்கு முக்கிய காரணம்.

    இந்நிலையில் அந்த சிறுவர்கள் பல்வேறு தவறான செயல்களை செய்ய ஆசைப்படுகின்றனர். மனநலக் கோளாறுகள் காரணமாக அவர்கள் தங்கள் உயிரைக் கூட மாய்க்க முயற்சித்த நிகழ்வுகளை நாங்கள் கண்டுள்ளோம். இந்நிலையைத் தடுக்கும் ஆற்றல் பெற்றோருக்கு உண்டு.

    வீட்டுச் சூழலை சிறுவர்களுக்கு ஏற்றதாக வைத்துக் கொள்ளுங்கள். சிறுவர்களின் அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதும் பெற்றோரின் பொறுப்பாகும். இல்லையெனில், சிறுவர்களின் மனநிலை மேலும் மோசமடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad