அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி!
கெரவலப்பிட்டி விவகாரம் தொடர்பில் மட்டுமல்ல ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது தனித்துவமான நிலைப்பாடு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுசன பெரமுனவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திற்குள் சுயாதீன அரசியல் கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் ,
சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திற்குள் சுயாதீன அரசியல் கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிறிலங்கா பொதுசன பெரமுனவுடன் சுதந்திர கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்சியின் தனித்துவத் தன்மையை பேணிக் கொண்டு அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளோம்.
எனவே அரசாங்கத்திற்குள் எமது கட்சியின் நிலைப்பாடுகளை, கெரவலப்பிட்டி விவகாரத்தில் மாத்திரமின்றி சர்ச்சைக்குரிய அனைத்து விடயங்களிலும் வெளிப்படுத்தியுள்ளோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் குறித்த எமது கட்சியின் நிலைப்பாடுகளை தெரிவிப்போம். இது எமது கடமையும் பொறுப்புமாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேவையான நேரத்தில் தேவையான விடயங்களையே செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை