மோட்டார் சைக்கிள் விபத்தில் கடற்படை வீரர் பலி...!
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெனியாய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பலிதெனியாய என்சல்வத்த பிரதேசத்தில் இருந்து தெனியாய நோக்கி வந்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தெனியாய ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பிரதான வீதியின் பள்ளமொன்றில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொட்டப்பொல - கெட்டபருவ - கெசல்கொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த லியனாராச்சி கங்கானம்கே பிரசன்ன (வயது - 33) என்ற கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இவருடன் பயணித்த பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த சமன் இந்திக (வயது - 33) என்பவர் காயங்களுக்குள்ளான நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தெனியாய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை