கிளிநொச்சியி டிப்பர் விபத்து...!
ஏ-9 பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் வாகனம் புடவை கடையினுள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று ஆடையகத்திற்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் தெய்வாதினமாக எந்த உயிரிழப்பும் இடம்பெறவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையினுள் உள்ள பல பெறுமதியான பொருட்கள் சேதமடைத்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆடையகத்தில் பணியாளர்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற மக்கள் என பலர் இருந்த போதும் எவருக்கும் எந்த விதமான காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை