முற்றுப்பெறாத ஆசிரியர் சங்கப் பிரச்சினை!
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களை இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடனும் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இதன்போது, தங்களது வேதன பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
எனினும் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன, பாடசாலைக்கு சமுகமளித்த ஆசிரியர்கள் பாடசாலை முடிவடைந்த பின்னரும் போராட்டாங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை