தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக அராலியில் பல குடும்பங்கள் பாதிப்பு...!
நேற்று இரவு தொடக்கம் பெய்துவரும் அடைமழை காரணமாக யாழில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் யாழ். மாவட்டத்திற்குட்பட்ட சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை அராலியில் மட்டும் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கானை பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
மழை இவ்வாறு தொடர்ந்து பெய்யுமானால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அராலியில் பல ஏக்கர் வயல்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள்ளன.
கருத்துகள் இல்லை