• Breaking News

    யாழ். பல்கலை மாணவர் விடுதிக்குள் வெள்ளம் : உதவினார் மணிவண்ணன்...

     யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சைக்காக வந்து தங்கி இருக்கின்ற மாணவர்களின் வாடகை அறைகள் உள்ள திருநெல்வேலி பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

    இதனால் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஊடாக விடுதிக்கு விண்ணப்பித்து விடுதியில் தமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள். 

    இந்த நிலையில் அவர்களின் அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களால் மாணவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட கலைப்பீட  மாணவர்களினால் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad