• Breaking News

    முடக்கலைத் தவிர வேறு வழியில்லை... வெளிவந்த இறுதி எச்சரிக்கை...!

     


    நாட்டில் கொரோனா பரவரல் அதிகரித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் முடக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

    எனினும் நாடு மீண்டும் முடக்கப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    பலரும் எதிர்பார்க்காத வகையில் பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    எவ்வாறாயினும், முடக்கம் தேவையா இல்லையா என்பதை இறுதியில் பொது நடத்தை தீர்மானிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad