• Breaking News

    துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய யானை பலி...!

     புத்தளம் - கருவலகஸ்வெவ, கல்வில பூங்காவில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று  உயிரிழந்ததாக கருவலகஸ்வெவ வனஜீராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்குள்ளாகிய நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

    கடந்த மூன்று நாட்களுக்கு முன் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதிக்குச் சென்று யானையை பார்வையிட்டுள்ளனர்.

    இதன்போது, நிகாவெரிட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு யானைக்கு 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி குறித்த யானை உயிரிழந்துள்ளது.

    மேலும், உயிரிழந்த காட்டு யானை 25 வயதுடையது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad