இரத்தினபுரியில் வெடிப்பு சம்பவம் ; பெண்ணிற்கு நேர்ந்த கதி...!
இரத்தினபுரியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இரத்தினபுரி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் சமையல் எரிவாயுக் கொள்கலன் வெடித்ததில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக குறித்த வெதுப்பகம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
அத்தோடு, மேலும் சிலர் சிறியளவில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை