அதிரடி நடவடிக்கை - ஐவர் அடங்கிய குழு கைது...!
வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட வாழைச்சேனை மக்களடி வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபார கும்பலொன்றை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை காவல்நிலைய போதைப்பொருள் ஒழிப்பு விசேட பிரிவினரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் வியாபாரக் கும்பல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐவரில் நால்வர் வாழைச்சேனைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களுக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் விநியோகிக்கும் ஒருவரும் அடங்கியுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரையும் வாழைச்சேனை காவல்த்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை