காங்கேசன்துறை பொலிஸாரால் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை...
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை பகுதியில் பொதுமக்களுக்கும் சாரதிகளுக்கும் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் 788 வழித்தட சாரதிகள், நடத்துனர்கள், மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காங்கேசன்துறை பொலிஸாரால் விசேட வீதி போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கொரோனா விழிப்பூட்டல் இன்று காலை 10 மணியளவில் கீரிமலை நகுலேஸ்வர ஆலய முன்றலில் இடம்பெற்றது.
கொரோனோ சூழலில் பாதுகாப்பாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான முறைகளையும் இதன்போது பொலிஸார் தெளிவுபடுத்தினர்.
இந்நிகழ்வில் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொட்டகட்சி கலந்து கொண்டதோடு காங்கேசன்துறை பொலிசாரால் இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை