தன்னால் இயலாது என்பதனை பகிரங்கமாக நிரூபித்துள்ளார் ஜனாதிபதி...
‘நாட்டையும் பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தற்போது தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை பகிரங்கமாக நிரூபித்துள்ளார்’ என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் வலுவான முடிவுகளை எடுப்பார் என்றும், வலிமையான ஆட்சியாளராக இருப்பார் என்றும் மக்கள் நினைத்தனர். அதேசமயம் எதுவும் செய்யப்படவில்லை. மக்களின் நம்பிக்கை போய்விட்டது என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை