இலங்கையின் பொருளாதாரம் எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் வாய்ப்பு உள்ளது...!
இலங்கையின் பொருளாதாரம் வெடிக்கப் போகும் நேரக் குண்டைப் போன்றது என பிரபல சர்வதேச பொருளியல் சஞ்சிகைகளில் ஒன்றான நிக்கீ ஏஷியா தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 130 பில்லியன் ரூபாவிற்கு மேல் பணம் அச்சிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் பண விநியோகம் 2.8 ட்ரில்லியன் ரூபா எனவும் இது பாரிய அதிகரிப்பு எனவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அச்சிடப்படும் பணத்தின் பெரும்பகுதி அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளங்களை வழங்கவும், ஓய்வூதியம் செலுத்தவும் செலவிடப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக தனியார் துறையில் சம்பளக் குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அரசாங்க நிறுவனங்களில் தொடர்ச்சியாக முழுச் சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது.
வட்டி வீதத்தை பேணுவதற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக பணத்தை அச்சிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
நிதி கட்டமைப்புக்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள அரசாங்கம் பணம் அச்சிடுவதாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எனினும், அவ்வாறு மித மிஞ்சிய அளவில் பணம் அச்சிடுவது பணவீக்கத்தை உருவாக்கும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் டபிள்யூ.ஜே.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி பற்றி எதிர்வு கூறல்கள் வெளியிடப்பட்டாலும் உண்மையில் 1 வீத நிகர வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையானது நேரக் குண்டை போன்றது எனவும், இந்தப் பொருளதாரம் எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை