மாவீர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!!
பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று பகல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்து அஞ்சலித்திருந்தனர்.
இந்த நிகழ்வில் நாங்கள் நினைவு கூருகின்றோம் என்ற அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை கொண்ட எழுத்து சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் ஏராளமாக சொரியப்பட்டிருந்தன.
இது ஒரு உணர்வு பூர்வமான அழகியல் காட்சிகொண்ட நிவைவேந்தல் நிகழ்வாக இருந்தது.
கருத்துகள் இல்லை