அமெரிக்காவில் மாஸ்டர், டாக்டரை ஓரங்கட்டி அண்ணாத்த புது சாதனை
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் மாஸ்டர், டாக்டர் ஆகிய படங்களின் வசூல் சாதனையை அண்ணாத்த முறியடித்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான மூன்றே நாட்களில் உலக அளவில் சுமார் ரூ. 150 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அண்ணாத்த புது சாதனை படைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டாலும், ரஜினி ரசிகர்கள் தமது ஆதரவை படத்துக்கு தொடர்ந்தும் வழங்கிவருகின்றனர்.
அண்ணாத்த படம் அமெரிக்காவில் 500க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸான மூன்று நாட்களில் 600,000 டாலர்கள் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியாகி அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது அண்ணாத்த, அதுவும் மூன்றே நாட்களில். இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் பட வசூலை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் முறியடித்தது. இந்நிலையில் மாஸ்டர், டாக்டரை அண்ணாத்த ஓரங்கட்டி புது சாதனை படைத்திருக்கிறது.
Rajinikanth & Siruthai Siva |
அண்ணாத்த படத்தை சிவா இயக்கிய விதம் ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் அவர் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க விரும்புகிறாராம். தன் அப்பாவை வைத்து மீண்டும் படம் பண்ண வேண்டும் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் சிவாவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை