இலங்கையின் பல பகுதிகள் இருளில் மூழ்கின!!!
இலங்கையின் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கொத்மலையிலிருந்து பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, இன்று பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாத்தறை, குருநாகல், இரத்மலானை, பன்னிபிட்டிய, சபுகஸ்கந்த, அத்துருகிரிய, பியகம, கொட்டுகொட, ஜயவர்தனபுர, ஹபரண உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை