பதுக்கி வைத்திருந்த பல சீமெந்து மூடைகள் சிக்கின...
மட்டக்களப்பில் சிமெந்து விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது என நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர்சதாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவில் சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த சில வர்த்தக நிலையங்கள் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டன.
இந்நிலையில், நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சுமார் 800க்கு மேற்பட்ட சிமெந்து மூடைகளை மீட்டதுடன் பொறிக்கப்பட்ட விலைக்கு அவற்றை விற்பணை செய்தனர்.
சிமெந்து விற்பனை செய்த உரிமையாளர்கள் சிலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர்சதாத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை