ஒருவர் உயிரிழந்த சம்பவம் – இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
எம்பிலிபிட்டி – பணாமுரே பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட பணாமுரே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸ் அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை பணாமுரே பொலிஸ் நிலையத்திற்கு வெளியே அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, குறித்த நபர் பொலிஸாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக கொலன்னா – எம்பிலிப்பிட்டிய வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சம்பவத்தை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை