வயர்லெஸ் ஹெட்போனை விழுங்கிவிட்டு அதனை லொகேஷனில் தேடிய அமெரிக்க பெண்...!
வலிநிவாரணிக்கு பதில் வயர்லெஸ் ஹெட்போனை இளம்பெண் ஒருவர் விழுங்கிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இளம்பெண் கார்லி என்பவர் கேமரா முன் அழுதுகொண்டே தான் செய்த தவறை பற்றி கூறி இருக்கிறார்.
அப்போது அவர் நான் படுக்கையில் ஓய்வில் இருந்தபோது, ஒரு கையில் வயர்லெஸ் ஹெட்போனுடனும் மறுகையில் வலி நிவாரணி மாத்திரையை வைத்திருந்தேன்.
தண்ணீர் பாட்டிலை எடுத்து மருந்துக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிவிட்டேன். நான் விழுங்கியது வலி நிவாரணி அல்ல என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். இருந்தாலும், அதை உணராமல் நான் பாட்டு கேட்டுகும் வயர்லஸ் ஹெட்போனை தேடியபோது, அதன் லொகேஷனை தேடியபோது, அது தான் இருந்த இடத்தையே காண்பித்தது.
அதன்பின்னர், ஃபைண்ட் மை ஏர்போட் இசையை வாசித்தேன். அதன் ஒலி என் வயிற்றில் கேட்டது. அதனால், மிகவும் பதற்றமடைந்து மருத்துவரிடம் சென்றேன்.
பின்னர் ஹெட்ஃபோனால் உள் உறுப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது எக்ஸ்ரேயில் தெரிந்ததும்தான் அந்தப் பெண் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இதன்பின்னர், அந்த வயர்லஸ் ஹெட்போன் எப்படி வெளியே வரும் என்ற குழப்பமும் இருந்தது. அறுவை சிகிச்சை செய்யலாமா? என யோசித்தப்போது இயற்கை உபாதையின் மூலமே வெளிவந்துவிட்டது என தெரிவித்து இருக்கிறார்.
கருத்துகள் இல்லை