பளையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதியது டிப்பர்...!
ஏ9 வீதியின், கிளிநொச்சி - பளை காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட பளை நகரப்பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடை ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றிரவு (23)பளை நகரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என பளை காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை