யாழ். சமூக செயற்பாட்டு மையத்தினால் விழிப்புணர்வு நடவடிக்கை...
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தினர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பெண்கள் சிறுவர்களுக்கு ஏற்படும் பால்நிலை வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம் 25ம் திகதி தொடக்கம் மார்களி 10ம் திகதி வரை உலகளாவிய ரீதியில் பெண்கள் எதிரான வன்முறை ஒழிப்பு வாரமாக கடைப்பிடித்து வருகிறின்ற நிலையில், யாழ் சமூக செயற்பாட்டு மையம் அதனை செயற்படுத்தும் வகையில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16ம் நாள் செயற்பாட்டை இன்று முன்னெடுக்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் யாழ். சமூக செயற்பாட்டு மையம் பதாதையை ஒப்படைத்து பெண்கள் எதிரான வன்முறை விழிப்புணர்வு செயற்பாட்டை இன்று ஆரம்பித்து வைத்தது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்
யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,
மாவட்ட செயலகம் மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் லேனுகாராணி, யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிர்தராஜ், UNHR நிறுவனத்தின் யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி சிவானந்தன் சற்குணராஜா மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மைய உத்தியோகத்தர்கள்என பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை