• Breaking News

    மீண்டும் இலங்கையை முடக்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்...!

     தற்போதைய சூழ்நிலையில், தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

    கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை முடக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்க விடுத்துள்ளார்.

    எனினும் தற்போதைக்கு அவ்வாறான ஓர் தேவை ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட் பரவுகை நிலைமை மோசமடையாதிருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    நாட்டில் கோவிட் மரணங்களில் தளம்பல் நிலை காணப்படுகின்றது எனவும், அண்மைய நாட்களாக இந்த மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

    ஓமிகோர்ன் திரிபினால் இலங்கைக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து எதிர்வு கூறல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

    தென் ஆபிரிக்காவுடன் நேரடியான விமான போக்குவரத்து சேவை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad