வெளியாகின விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவின் திருமணப் புகைப்படங்கள்...!
தொகுப்பாளினி பிரியங்காவின் திருமணப் புகைப்படத்தினை அவரின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தற்போது பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களை கடந்து கலக்கி கொண்டிருக்கின்றார்.
அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அம்மா பற்றியும், தம்பி பற்றியும் அதிகம் கூறியிருப்பார்.
தொகுப்பாளர் பிரியங்கா தான் தொகுத்து வழங்கும் ஷோக்களில் தன் கணவரைக் கலாய்த்து பலமுறைப் பேசியிருக்கிறார்.
ஆனால் அவரை எங்குமே அறிமுகம் செய்து காட்டியதில்லை. இந்த நிலையில் பிரியங்காவின் திருமண புகைப்படங்களை ரசிகர்கள் தேடிக் கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை