ஒரு இலட்சம் பனைவிதை நடுகை ஊர்காவற்றுறை, வேலணையில் ஆரம்பம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் "எமது நிலம் : எமது மரங்கள்" எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நாட்டும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இந்த செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஊர்காவற்துறை பகுதியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்று பிள்ளைகளைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்த தியாகத் தந்தை முதல் விதையை நாட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதன் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் அவர்கள் விதையினை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை