மலேசியா தமிழனின் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது சிங்கப்பூர்...
கடந்த 2009ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 42 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியா வாழ் தமிழர் நாகேந்திரனின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
சிறையில் உள்ள நாகேந்திரனை விடுதலை செய்யக் கோரி 40 ஆயிரம் பேர் ஒன்லைனில் மனு கோரினர்.
அதற்கு பதிலளித்துள்ள சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது என்றும், தூக்குத் தண்டனை 10-ஆம் திகதி நிறைவேற்றப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை