வங்காள விரிகுடாவில் பாரிய தாழமுக்கம்...!
எதிர்வரும் 24, 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலாக மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தனது முகப்புத்தகத்தில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கமானது தீவிர தாழமுக்கமாக மாறி இந்தியாவின் சென்னையிலிருந்து 270கீ.மீ. கிழக்காக கடலில் நிலை கொண்டிருக்கின்றது.
இன்று (18) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தாழமுக்கம் நகர்வு திசையில் மாற்றத்தைக் கொண்டிருப்பதோடு மிகவும் குறைவான வேகத்தில் நகர்வதால் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் மதுராந்தகத்தில் கரையைக் கடக்கும்.
எனவே வடக்கு மாகாணத்திற்கு கிடைத்து வரும் மழை நாளை வரை தொடர வாய்ப்புள்ளது.
அத்துடன் எதிர்வரும் 24,25, 26 மற்றும் 27ஆம் திகதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை