யாழிலுள்ள பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை
நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக இன்று யாழ். மாவட்ட பாடசாலைகள் நிறுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவுறுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.
இதனால் மாவட்டத்தில் இன்றைய தினம் பாடசாலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதோடு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு அண்மையில் உள்ளோர் தங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்ளுமாறும்,
அந்தந்தப் பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக தமக்குரிய வழிகாட்டலினை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை