• Breaking News

    வெடிக்காத நிலையில் உள்ள கைக்குண்டு மீட்பு...!

     திருகோணமலை, தம்பலகாமம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    தனியார் காணியினை துப்புரவு செய்யும் போது இதனைக் கண்ட காணி உரிமையாளர் தம்பலகாமம் காவல்துறையினருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

    குறித்த இடத்திற்குச் சென்ற மீட்பு அணி, அக்கைக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை கந்தளாய் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பின்னர் இடம்பெறும் என தெரித்துள்ளனர்.

    இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad