• Breaking News

    உணவகத்தினுள் நுழைந்த காவல்துறை அதிகாரி மூர்க்கத்தனமாக தாக்குதல்...!

     


    பளை நகரப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த 23ஆம் திகதி அன்று பளை காவல்துறை பொறுப்பதிகாரியால் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

    பளை நகரப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் மாலை உணவுக்காக சிலர் உணவகத்திற்குள் வந்திருந்த வேளை திடீரென வந்த பளை காவல்துறை பொறுப்பதிகாரி அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

    இதில் உணவகத்தில் பணிபுரிவோர் மீதும் தாக்கியுள்ளார். இதன்போது பளை காவல்துறை பொறுப்பதிகாரியிடம் அங்கிருந்தவர்கள் ஏன் எங்களை தாக்குகிறீர்கள் என்று கேட்ட போது முகக்கவசம் இல்லாமையாலே தாக்கினேன் என்று கூறியுள்ளார்.

    ஆனால் அங்கிருந்த ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணிந்திருந்தும் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

    உணவகத்தினுள் உணவு உண்ண வந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய விடயமானது கண்டிக்கதக்க விடயமாகும் எனவும், தம் மீது வீணாக தாக்குதல் நடாத்திய பளை காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad