தொடரும் கனமழை காரணமாக யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை...
யாழ். மாவட்டத்தின் தற்போதைய காலநிலை காரணமாக நாளை முதல் (10.11.2021) பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்தாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி மாகாண கல்வி அமைச்சினால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை