பல்கலை மாணவர்களுக்கு கஜதீபனால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு கஜதீபன் அவர்களால் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பல்கலைக்கழக பரீட்சைகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து விடுதிகளில் இடம்பெயர்ந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கலைப்பீட மாணவர்களுக்கே இவ்வாறு உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் லண்டன் கிளையின் அனுசரணையுடன் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது .
தமது சக மாணவர்களின் நிலையறிந்து மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களினால் நிவாரண பணிகள்அண்மைக்காலமாக ஒழங்குபடுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை