• Breaking News

    தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக யாழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் வெளியாகின...

     நேற்று தொடக்கம் பெய்கின்ற தொடர் மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . யாழ். மாவட்ட செயலகத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்தவகையில் ஜே/40 கிராம சேவகர் பிரிவில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 221பேரும், ஜே/41 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14பேரும், ஜே/42 கிராம சேவகர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162பேரும், ஜே/43 கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும், ஜே/44 கிராம சேவகர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 60பேரும், ஜே/45 கிராம சேவகர் பிரிவில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 120பேரும், ஜே/46 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 11பேரும், ஜே/47 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் மற்றும் ஜே/48. கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    யாழ். மாவட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த மக்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழையுடன் கூடிய காற்று காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

    அத்தோடு காரைநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு  குடும்பங்கள் இடம்பெயர்ந்து தமது  உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். இது இவ்வாறிருக்க தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad