பிரபல கவர்ச்சி நடிகை மருத்துவமனையில் அனுமதி
சர்ச்சைக்கு பெயர் போன பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் போன பூனம், கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கங்களில் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வந்த அவர், தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பே என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்தார்.
Poonam Panday with husband |
ஆனால் திருமணம் முடிந்து கோவாவில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது கணவர் சித்ரவதை செய்து அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பூனம் பாண்டே தாக்கப்பட்டதில் தலை, முகம் மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து புகார் பெற்ற மும்பை போலீசார் கணவர் சாம் பாம்பேவை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை