யாழில் குழாய் கிணற்றிலிருந்து பாயும் தண்ணீர்... (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை - முள்ளி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலுள்ள குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்கின்றது.
ஜே/133 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் ரவி என்பவரது வீட்டிலுள்ள கிணற்றிலிருந்தே இரண்டு நாட்களாக தண்ணீர் இவ்வாறு பாய்கின்றது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாலேயே தண்ணீர் இவ்வாறு மேல்நோக்கி பாய்கின்றது.
இதனை மக்கள் பார்வையிட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
கருத்துகள் இல்லை