• Breaking News

    கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமாம்...

     கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆலோசனை வழங்கியுள்ளார். 

    அரசாங்க அனுமதியுடன் கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை கூறியுள்ளார். 

    மேலும் தெரிவிக்கையில்,


    கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டுக்கு பாரியளவில் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்.

    தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.

    கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

    இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad