வீடு உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது...!
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் வீடு உடைக்கப்பட்டு ஆறு பவுண் நகையும், ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்று (22) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளையுடைய நபர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஆறரைப் பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை