லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் பலி!!!
லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்
இவ்வாறு உயிரிழந்தவர்கள் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த தீ விபத்தில் தாய், நான்கு வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் 18 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்த குழந்தைகளுக்கு பாட்டி எனவும், குறித்த பெண்ணின் தாயார் என்ற விபரமும் வெளியாகியுள்ளது. இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு தன் பேரக்குழந்தைகளை பார்க்க வந்த நிலையிலேயே அவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் குறித்த வீட்டிற்கு ஆறு தீயணைப்பு வண்டிகளையும் 40 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பியதாக லண்டன் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் ஒன்பது மீற்றர் ஏணியை பயன்படுத்தி முதலாவது மாடியிலிருந்து இரண்டு பெண்களையும் இரு குழந்தைகளையும் உயிருடன் மீட்டுள்ளனர் எனினும் அவர்கள் பின்னர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் அந்த கட்டடத்திலிருந்து வெளியேறிய ஒருவர் காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை