அமைச்சர் விதுல விக்கிரம நாயக்க யாழில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பு...
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை மேற்பார்வை செய்யும் முகமாக இன்றைய தினம் யாழ். மாவட்டத்திற்கு தொல்பொருள் துறை அமைச்சர் விதுல விக்ரமநாயக்க வருகை தந்திருந்தார்.
அந்தவகையில் தொல்லியல் திணைக்களத்தினால் அண்மையில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட கீரிமலை சிறாப்பர் மடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன்போது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் புஸ்பரட்ணம், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை