தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு...!
புத்தளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அயலவர்கள் புத்தளம் காவல்துறையினருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புத்தளம் ஜயபிம பகுதியில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு காவல்துறையினர் சென்று பார்வையிட்டபோது தூக்கிட்டவாறு அழுகிய நிலையில் பெண்ணொருவர் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உதவி நீதவான் மொஹமட் இக்பால், அப்பகுதிக்குச் சென்று பெண்ணின் சடலத்தை பார்வையிட்டார். இவ்வாறு உயிரிழந்தவர் மாதம்பை பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியாக இருகலாமென புத்தளம் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த பெண், மூன்று கிழமைகளுக்கு முன்னர் குறித்த வீட்டிற்கு வாடகைக்கு வந்ததாகவும், ஆண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணோடு தொடர்பிலிருந்தவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உதவி நீதவான் மொஹமட் இக்பால் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை