காஜல் அகர்வால் கர்ப்பமா? இல்லையா? - புகைப்படத்தால் ரசிகர்களிடையில் குழப்பம்...!
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் ஒரு பிஸியான நடிகை. இவருக்கு கடந்த ஆண்டு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் காஜல். ஆனால், நடிகை காஜல் தீடீரென சிறுது காலம் திரையுலகில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.
இதன்பின், கமலுடன் இந்தியன் 2, நாகர்ஜூனாவுடன் கோஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இருந்து காஜல் விலகியதாக கூறப்பட்டன.
இதற்கு முக்கிய காரணம், நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பது தான் என்று திரை வட்டாரங்கள் கூறி வந்தது.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதனை பார்க்கும் பொழுது, காஜல் கர்ப்பமாக இல்லை என்று தெரிகிறது. ஆனால் சிலரோ, பழைய புகைப்படத்தை தற்போது காஜல் பதிவு செய்துள்ளார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்படி செய்து, தான் கர்ப்பமாக இருப்பதை காஜல் மறைக்கிறாரா என்று சிலர் கேட்கின்றனர்.
ஏற்கனவே நடிகை ஸ்ரேயா, தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து, குழந்தை பிறந்த பிறகு தான், தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்றே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை