காலணிகளுக்குள் வைத்து கைத்தொலைபேசி கடத்திய கில்லாடி சிக்கினார்...
களுத்துறை சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்ல முற்பட்ட நான்கு கையடக்கத் தொலைபேசிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
களுத்துறை சிறைச்சாலையில் செயற்படும் சி.சி.ரி.வி. கட்டமைப்பு மற்றும் ஆயுதப் பிரிவு அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பு காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாணந்துறை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு இன்று குறித்த கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முயன்றவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் ஒரு ஜோடி பாதணிக்குள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை