வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரின் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர் - சுடச் சுட கொடுக்கப்பட்ட பதிலடி...!
மாவீரர் தினமான நேற்றையதினம், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன் அவரது இல்லத்தில் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டித்திருந்தார்.
இதன்போது உழவு இயந்திரத்தில் வந்த இராணுவத்தினர் அவரது வீட்டுக்குள் புகுந்து சுடர் ஏற்றிய இப்படியான தொடர்பில் விசாரணை நடாத்தினர்.
அதற்கு அவர் "நான் என்னுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை" என இராணுவத்தினருக்கு பதிலடி கொடுத்து அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை