• Breaking News

    மஹிந்தவின் குடும்பத்தை கண்டு நான் அஞ்சவிவ்லை - மஹிந்தவின் கட்சிக்காரர் தெரிவிப்பு...!

     தற்போதைய அரசாங்கம் நகைச்சுவையாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

    இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நாட்டில் விரைவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    பசில் ராஜபக்ச அல்லது ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் தாம் பயப்படவில்லை எனவும் தான் மக்கள் பலத்தால் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

    இதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளை சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம ஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாபா ஆகியோர் அண்மைய நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad